tamilni 74 scaled
இந்தியாசெய்திகள்

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

Share

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் நகர்ந்து தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக்ஜாம் புயல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதுடன், புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் மழை குறைந்ததால் சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், புயல் தற்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்ததையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...