நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது என்று அரசு தீர்மானித்துள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், செப்ரெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகின்றது என்று ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
டுவிற்றர் பதிவொன்றின் மூலமாக அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 200 ஐத் தாண்டியுள்ளது.
Leave a comment