மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும், ஆசிரியர் சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் 40 வீதமான மாணவர்களே கல்வியைப் பெறுகின்றனர், இந்த நிலையில் ,முழு மாணவர்களும் கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காது அரசாங்கம் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்திய பின்னர், பரீட்சைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment