பால் புரைக்கேறி இறந்த குழந்தைக்கு கொவிட்!

Baby

யாழ்ப்பாணம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள 15 மாத பெண் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதக் குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது.

இந் நிலையில் நேற்று (15) மந்திகை ஆதார வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் உடலிலுள்ள மாதிரிகளை வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

பரிசோதனையில் பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version