இந்தியாவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி அவசர கால பயன்பாட்டுக்காகவே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கொரோனாத் தொற்று பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த நிபுணர் குழு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#India
Leave a comment