விஜய்யிடம் தலைமைத்துவ பண்பே இல்லை- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

2 5

நடிகர் விஜய், சினிமாவை விடுத்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியவர் இதுவரை பிரம்மாண்டமாக 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தலை எதிர்நோக்க உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

அரசிடம் உரிய அனுமதி வாங்கி Road Show நடத்தி வந்தார், கடைசியில் கரூரில் அவர் வந்தபோது நிறைய அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது.

கரூரில் நடந்த சம்பவம் குறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

அதில், மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் உள்ள தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்தனர். ஆனார் கரூர் பிரச்சார நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் என நீதிபதி காட்டம்.

Exit mobile version