3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரியைத் தாக்கிய தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் – சட்டாரா பகுதியைச் சேர்ந்த வன சரக பெண் அதிகாரியான சிந்து சனாப், காட்காவன் வன பகுதியில் கடமையாற்றி வருகிறார்.
3 மாதக் கர்ப்பிணியான குறித்த பெண் அதிகாரி கடமை முடிந்து வீடு திரும்பும்போது, கணவன் மற்றும் மனைவி இணைந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வன சரக பெண் அதிகாரி கூறும்போது,
பணியில் இணைந்த நாள் முதல், அந்த நபர் என்னை அச்சுறுத்துவதும், பணம் கேட்டு தொந்தரவு செய்தபோதும், நான் அதற்கு அஞ்சவில்லை. நேற்றைய தினம் எனது கடமையை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது, என்னைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், எனது கணவரையும் காலணிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள ராமசந்திர ஜான்கர், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராகவும், உள்ளூர் வன குழு உறுப்பினராகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
#IndiaNews