நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாரிய உணவு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து செல்கிறது. இதனால் நட்டு மக்கள் பரவலாக உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும்.
இதன் காரணமாக வறுமை, போசாக்கின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள், பெருந்தோட்டத் துறையினர் உள்ளிட்டோர் பெரும் நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும்.
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தவண்ணம் செல்கின்றன. இந்த உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை குறைந்த உணவை உட்கொள்ள வழிவகுக்கும்.
ஒவ்வரு இல்லாது உணவை சரியாக உட்கொண்டாலும் உணவு அல்லாத விடயங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட்ட பிற விடயங்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இவற்றின் காரணமாக நாடு மிக மோசமான சூழ்நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது. – என்றார்.
#SriLankaNews