எரிமலையின் மீது நாடு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!!

Tharmalingam Sitharthan

நாடு இன்று எாிமலையின் மீது இன்று நாடு அமர்ந்துள்ளது. எப்போது வெடிக்குமோ தெரியாது என்று என்று சிறிமாவோ அன்று கூறிய வார்த்தை இன்றுதான் பொருத்தமாகவுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

அவர் மேலும் கூறுகையில்;

நாடு அதாளப்பாதாளத்துக்கு சென்றுக்கொண்டிக்கிறது. பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் இன்று அஞ்சுகின்றனர்.

அந்திய செலவாணி பற்றாக்குறை உட்பட தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் போன்று இதுவரை காலமும் நெருக்கடிகள் இலங்கையில் ஏற்படவில்லை. எனினும் இன்றைய நெருக்கடிக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல. பல நாடுகள் இதனை சிறப்பாக சமாளிக்கின்றன.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள ஆட்சியாளா்கள் தமிழ் மக்களின் நியாயமானக் கோாிக்கைகயை நிறைவேற்றவில்லை. இதுவே இன்று நாடு கையேந்தி நிற்பதற்கான காரணம்.

இலங்கையின் அரசாங்கங்கள் எவையுமே தமிழ் மக்களின் உாிமைகளை வழங்கவில்லை. இனப்பிரச்சனையை தீா்க்க முயற்சிக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது அதிகாரங்களை பிரயோகித்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version