Kusal.Mendis 750x400 1
செய்திகள்விளையாட்டு

குசல் மென்டிசுக்கு கொரோனா!! – இரத்தாகுமா ஆஸ்திரேலிய தொடர்!!

Share

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரரரும் விக்கெட் காப்பாளருமாகிய குசல் மென்டிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சாணக்கவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடரின் விக்கெட் காப்பாளராக தி​னேஷ் சந்திமல் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னரே, சகலதுறை வீரர் சாமிக கருணாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் அவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதுடன் பூரண குணமடைந்துள்ளார். இவர் பெரும்பாலும் இன்றிரவு ஆஸ்திரேலியா நோக்கி பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், ஐந்து போட்டிக்களைக் கொண்ட டி-20 போட்டிகள் பெப்ரவரி 11ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...