lions covid
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா!

Share

சிங்கப்பூரில் 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தெற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

523 பேர் சாவடைந்துள்ளனர் .

கொரோனா வைரஸ் மனிதனை மட்டுமல்ல மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா துரு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆப்பிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை திறந்தவெளியில் விட்டு இருந்தார்கள்.

மக்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று இவற்றை பார்வையிடவும் முடியும் .

அதில் ஆசிய வகை சிங்கங்கள் சில சோர்வாக காணப்பட்டன.

சளி பிடித்து தும்மியபடியும் இருந்தன.

எனவே சிங்கங்களுக்கு சோதனை நடத்தினார்கள்.

அதில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய தெரிய வந்துள்ளது.

ஆனாலும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நன்றாக உணவு சாப்பிடுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் .

அத்தோடு ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாமே சந்தேகித்து அதற்கும் பரிசோதனை நடாத்தி வருகிறார்கள்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...