ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா! தொற்றின் கோரப்பிடிக்குள் சீனா

2021 06 16T050428Z 50345581 RC2H1O9N6P8C RTRMADP 3 HEALTH CORONAVIRUS CHINA VACCINATIONS

வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்த 15 பேர் உட்பட 90 பேருக்கு கொரோனா  உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் மங்கோலியா, ஹெய்லோங்ஜியாங், ஹெபெய், யுனான், குவான்டோங், சினுவா ஆகிய பகுதிகளில் 75 பேருக்கு கொரோனா  உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் 90 பேருக்கு உறுதியாகியுள்ள நிலையில் சீனா மீண்டும் முடக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தான் முதன்முதலில் கொரோனா உறுதியானது.

இதனையடுத்து தற்போது உலகம் முழுவதும் பரவி உலகத்தை பாரிய அச்சுறுத்தலுக்குள் தள்ளியுள்ளது.

டெல்டா வைரஸ் பரவலின் தீவிர தன்மை கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் உலகை அச்சுறுத்தி வருகிறது.

#WorldNews

Exit mobile version