ரஷியாவில் கொரோனாவால் சாவடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

newvirus

Corona

ரஷியாவில் கொரோனாவுக்கு சாவடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கொரோனா நோயாளிகள் சாவடைந்துள்ளனர் எனவும் இதுவே ஒருநாளில் சாவடைந்தவர்களின் எண்ணக்கையில் கூடுதலான எண்ணிக்கை  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 249,215 போ் கொரோனாவுக்கு சாவடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 39,160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,73,655-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியாவில் இதுவரை 76,19,596 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்;

10,04,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதுஎனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#world

Exit mobile version