கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு குறித்து வெளியான தகவல்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(27) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நாடாளுமன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews