மீண்டும் வழமைக்குத் திரும்பிய தொடருந்து சேவைகள்!-

Train 1

கடந்த 27 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

புனானை – வெலிகந்தவுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, மட்டக்களப்பு நோக்கிய மீனகயா நகரங்களுக்கு இடையிலான அதிவேக தொடருந்து கொழும்பு கோட்டையிலிருந்து நேற்று (28) இரவு 7 மணிக்கு புறப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சேவையில் ஈடுபடும் பொடி மெனிக்கே தொடருந்து இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version