india
செய்திகள்இந்தியா

ஹிஜாப்பிற்கு தொடரும் தடை!!

Share

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.

இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது.

பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நடந்தது.
அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களை கர்நாடக் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே.

எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...