வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கலந்தாய்வு இடம்பெற்றது.
அரச அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்று (05) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயாக்க, தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத், ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹமட் , பத்திரண,திவாரட்ண, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இங்கே தெரிவிக்கப்பட்டதுடன், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கருத்துக்களும் கேட்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
#SrilankaNews
Leave a comment