அமைச்சு பதவியைவிடவும், மனசாட்சியே முக்கியம். அதற்கு எதிராக செயற்படமுடியாது. அமைச்சு பதவி பறிக்கப்பட்டதையிட்டு கவலை அடையவில்லை.” என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.
” அமைச்சு பதவி என்பது நிரந்தமற்றதொன்றென நான் இதற்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பதவிகள் வரும்போகும். ஆனால் மனசாட்சி அப்படி அல்ல. மனசாட்சியின் பிரகாரமே நாம் செயற்பட்டுள்ளோம். எல்லா விடயங்களையும் வெளிப்படுத்தினோம். ஆனால் நாம் இங்கும் பொய்யுரைக்கவில்லை. உண்மை பேசினால் வலிப்பவர்கள்தான் எம்மை விரட்டியுள்ளனர். நாம் மக்களின் மடியில்தான் விழுவோம். மக்களுடன் இணைந்து தாய் நாட்டுக்காக போராடுவோம்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாளை முடிவெடுக்கப்படும்.” – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment