வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் திடிரென அந்த சந்திப்பை இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஆளுநர் அலுவலகம் முன்பு குழப்பமான நிலை ஏற்பட்டது.
இன்று நண்பகல் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திடீரென அந்த சந்திப்பை இரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காணி உரிமையாளர்கள் கேட்டபொழுது,
இந்த சந்திப்பு தொடர்பில் நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது தொடர்பாகவோ நாளை இந்த சந்திப்பு இடம் பெறுவது தொடர்பாகவோ எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் ஆளுநரை சந்திக்க வெளி மாவட்டங்கள் தூர இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்தனர்.
#SrilankaNews