ஐ.நா. பொதுச் சபையின் தலைவருக்கு கொரோனா தொற்று!

image 8c9357834b

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் இலேசான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#WorldNews

Exit mobile version