யாழ்- நாகர்கோவில் பகுதிகளில், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில், கும்பல் ஒன்றினால், மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதிகளில், ஒரு அணி, உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து, வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு, அங்கிருந்து அள்ளிச் செல்வதாகவும், பிரதேச சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுப்பதற்கு, பிரதேச ஒருங்கிணைப்பு குழு உட்பட பலரிடமும், தொடர்ச்சியாக முறையிட்டும், எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews

