விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டில் பெரும்போகத்தில் பெருமளவான நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த பயிர்களுக்காக இழப்பீடு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆலோசனைக்கமைய 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தீர்மானத்துக்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக இன்று முதல் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இத் தீர்மானத்துக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்போக விளைச்சல் குறைவடையும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews