காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது.
யாழ் நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் இன்று (28) நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.
தலைவர் த.சித்தார்த்தன் பா. உ தோழர் ஆனந்தி அண்ணரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குரு, வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சுகு சிறீதரன் ஆகியோர் நினைவு உரை நிகழ்த்தினார்கள்.
#SrilankaNews