படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

IMG 20211110 WA0014

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

#SrilankaNews

Exit mobile version