“அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிக்கட்சிகளுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே எதிரணியில் இருந்து மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
” கழுத்தை பிடித்து வெளியே செல்லுங்கள் என மொட்டு கட்சி அறிவித்துவிட்டது. எனவே, இனியும் இங்கு இருந்து பயன் இல்லை. அது அரசியல் நாகரீகமும் கிடையாது.
பங்காளிகள் வெளியேறினால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் நிச்சயம் வெளியேறும். அவ்வாறு நடைபெற்றால், இந்த அரசுக்கு எதிராக இணைந்து போராடலாம். ” – என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment