ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் மேலதிக 79 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கொழும்பு மாநகரசபையில் நேற்று பாதீடு முன்வைக்கப்பட்டது. இரவு 9 மணிவரை விவாதம் இடம்பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின் பாதீடு நிறைவேறியது.
கொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில் 101 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சுதந்திரக்கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
#SriLankaNews
Leave a comment