யாழ். பருத்தித்துறை புனித நகர் பகுதியில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
பல கிராமங்களிலிருந்து ஒன்று சேர்ந்து கும்பலாக வந்தவர்கள் தமது வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பருத்தித்துறை பொலிஸாருடன், நெல்லியடி பொலிஸாரும் வரவழைக்கப்பட்ட நிலையில், குறித்த வன்முறைச் சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட வீடுகள் காணப்படும் பகுதியில் வசிக்கும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.