hqdefault
செய்திகள்இலங்கை

கருத்து சுதந்திரத்தை இழக்கும் அரச ஊழியர்கள்!!

Share

அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளது. இதுவொரு பொருத்தற்ற தீர்மானம் இதனை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தற்போதைய அரசாங்கம் கைது செய்து வருவதுபோல அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது.

அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...