WhatsApp Image 2021 11 02 at 09.45.45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சினிமா பாணியில் பணம் கொள்ளை! – சாரதி அதிரடி கைது

Share

ஹற்றன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை நேற்று விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஹற்றன் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பில் இடுவதற்காக கண்டியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றால் கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிட வந்துள்ளனர்.

அந்தவேளை அதிகாரியும் பாதுகாப்பு ஊழியரும் வானிலிருந்து இறங்கியவுடன் சாரதி வானை எடுத்துக் கொண்டு பணத்துடன் தப்பித்துள்ளார்.

தலவாக்கலை– லிந்துலை வழியாக அம்பேவல பகுதியில் வான் செல்லுகின்றமையை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் வானை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த பணத் தொகைகைகயும் வானையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹற்றன் பொலிஸ் நிலையத்துக்கு கையளித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரான சாரதியையும் பணத் தொகையையும் ஹற்றன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது என நுவரெலியா விசேட அதிகாரப் படையினர் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Image 2021 11 02 at 09.45.36

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...