பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பத்மேவைச் சந்தித்த தென்னிலங்கை நடிகை ஒருவர், அவரைத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில், துபாயில் தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
:இந்தப் புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகைகள் தொடர்பில் CID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கெஹல்பத்தர பத்மேவின் கறுப்புப் பணம் (Black Money) குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா (Money Laundering) என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பல தென்னிலங்கை நடிகைகள் இது தொடர்பில் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.