சீன மின் திட்ட ஒப்பந்தம் ரத்து – உறுதிப்படுத்தினார் துமிந்த திசாநாயக்க

Duminda Dissanayake

யாழ் தீவுகளில் சீனாவால் மேற்கொள்ளப்பட இருந்த கலப்பு மின் திட்ட ஒப்பந்தம் இன்னும் உத்தியோக பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும் அவ் ஒப்பந்தத்தை நாம் ரத்து செய்து உள்ளோம் என சூரியசக்தி, காற்றாலை, மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இத்திட்டம் நடைமுறையில் இருப்பதாக சீனத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆனால் இவ் உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டு விட்டதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version