இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவரின் (சீன நாடாளுமன்ற சபாநாயகர்) புத்தாண்டு வாழ்த்துச் செய்தியையும் சபாநாயகரிடம் கையளித்தார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை இவ்வருடத்தில் பலப்படுத்துவதற்கு உறுதியுடன் இருப்பதாக சீனத் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்தமைக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவருக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் இங்கு நன்றி பாராட்டினார்.
#SrilankaNews