உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் நிராகரிக்கப்பட்ட உரத்தை பலவந்தமாக கையளிக்க முயற்சிப்பதற்கு சீன நிறுவனத்திற்கு உரிமையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான பாரதூரமான பிரச்சினை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றிடங்களுக்கான புதிய அமைப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்காணலுக்காக இன்று (27) காலை கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
#SrilankaNews