china 1
செய்திகள்உலகம்

கொரோனாவால் முடங்கும் சீனா- மூன்றாவது பெரு நகருக்கு முழு ஊரடங்கு

Share

சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு பெரு நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

சீனாவின் லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள மக்கள் தொகை 40 லட்சம். இதுபோல மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது .

இந் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60 லட்சம். இந்த மாகாணம் ரஷ்யாவுடன் எல்லையில் உள்ளது.

ரஷ்யாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 159 பேர் சாவடைந்தும் உள்ளனர். 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்தும் தொற்று இந்த குறிப்பிட்ட மாகாணத்துக்குப் பரவியிருக்கலாம் என சீனா தெரிவித்துள்ளது.

இந்த மாகாணம் முழுவதும் பாதிக்கப்பட்டோருடன் தொடர்ப்பில் இருந்த 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...