சீனா எமது உயிர் நண்பன்! – பிரதமர் மஹிந்த புகழாரம்

Mahinda 1 1

வரலாற்றில் எங்கும் எப்போதும் எமக்கும் சீனாவுக்கும் இடையில் மனக்கசப்புகள் எவையுமே நிகழ்ந்ததில்லை. சீனா எமது உயிர் நண்பன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு கால பூர்த்தி மற்றும் இறப்பர் அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை ஆகியவற்றை முன்னிட்டு கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்விலேயே பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

நிகழ்வில், இலங்கை வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ மற்றும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சஷ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைத்தனர்.

இதேவேளை, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ யும் ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version