large china condoms population birth rate 221605
செய்திகள்உலகம்

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி: கருத்தடை சாதனங்களுக்கு 13% வரி விதிப்பு!

Share

சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 33 ஆண்டுகளாக கருத்தடை சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கை ரத்து செய்ய சீன அரசு தீர்மானித்துள்ளது.

1980களில் கொண்டு வரப்பட்ட ‘ஒரு குழந்தை திட்டம்’ காரணமாக சீனாவின் பிறப்பு விகிதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைச் சரிசெய்ய 2015-ல் இரண்டு குழந்தைகளும், 2021-ல் மூன்று குழந்தைகளும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இத்தனை தளர்வுகளுக்குப் பின்னரும் பிறப்பு விகிதம் அதிகரிக்காததால், தற்போது ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகளுக்கு 13 சதவீத மதிப்பு கூட்டு வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு அந்நாட்டு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“ஆணுறையின் விலை உயர்த்தப்பட்டாலும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு அதைவிட பல மடங்கு அதிகம்” என நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்துவது திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும், பாலியல் ரீதியான நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

33 ஆண்டுகால வரி விலக்கு ரத்து செய்யப்படுவது சீனாவின் மக்கள் தொகை மாற்றத்தில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...