sada
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மணற்காட்டில் கரையொதுங்கிய சடலம் சிம்பன்சியாம்!!!

Share

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலத்தை சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிசார் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை பொலிசார் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என தெரிவித்து புதைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன.

அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...