இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றுள்ளது.
முதலமைச்சரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேப்பியர் பாலத்தில் விளம்பர படப்பிடிப்பிற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
#India
Leave a comment