நாடளாவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் வடக்கின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறுமையாக காணக்கூடியதை அவதானிக்க முடிகிறது.
அண்மைய நாட்களாக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், வடக்கின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்குவதை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில், சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோல் இல்லை என்ற பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment