அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படவில்லையெனில், மாற்று வழியைக் கையாள வேண்டும் என வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்ச், எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் பின்னர், மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன வரி அல்லது இறக்குமதி தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் எவ்வித தளர்வுகளும் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment