ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது தொடர்பில் தன்னுடன் அரச மேல் மட்டம் கலந்துரையாடாமை தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.
அத்துடன், அமைச்சு பதவி மற்றும் மொட்டு கட்சியின் உறுப்புரிமையையும் துறந்துவிட்டு, மீண்டும் சட்டத்தரணி தொழிலை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கையளிக்கவும் நீதி அமைச்சர் உத்தேசித்துள்ளார். எனினும், நீதி அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பொறுப்பேற்கமாட்டார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பின்போது நீதி அமைச்சுக்கு பதிலாக அலிசப்ரிக்கு வேறொரு அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews