அதிக விலைக்கு சீமெந்து விற்பனை: விசேட சோதனை!!!

Cement

சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு மூடை சீமெந்துக்கு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் அதிகபட்ச சில்லறை விலை 1,275 ரூபாவாகும்.

எனினும், அந்த விலையை விட அதிக விலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீமெந்து மூடைகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version