court hammer
செய்திகள்இலங்கை

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! – மன்னாரில் சம்பவம்!

Share

மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...