மதவாச்சி இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் ஏ9 வீதியில் நேற்று (10) காலை இடம்பெற்ற கார் – முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியின் குறுக்கே எதிர் திசையில் திரும்ப முற்பட்ட போது எதிர்திசையில் பயணித்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் புஹுதிவுல, மதவாச்சியை சேர்ந்த 55 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
#SrilankaNews