வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியின் அருகே உள்ள வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
தனியார் ஹொட்டலில் இருந்து வைத்தியர்கள் சிலர் குறித்த காரில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கார் சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.
#SriLankaNews
Leave a comment