வெல்லவாய, ஆனப்பலம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பில் வீட்டுத் தோட்டமொன்றில் காணப்பட்ட கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், உலர் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் மிக சூட்சுமமான முறையில் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 10 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதன்போது 150 கிராம் உலர்ந்த கஞ்சாவும், 325 கஞ்சா விதைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர் ஆனப்பலம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவராவார்.
அத்துடன், சந்தேக நபர் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews