புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும், மீண்டும் ஒரு நோய் ஏற்படும்போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாக காணப்படும். எனவே இவர்கள் தமக்குரிய மருந்துகளை தொடர்ச்சியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் எனில் பிரதேசத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் பதிவுசெய்து நடமாடும் சேவையினூடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment