பதவியை இராஜினாமா செய்தார் கப்ரால்!
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் பதவி இராஜினாமா கடிதத்தை இன்று (திங்கட்கிழமை) காலை கப்ரால் கையளித்துள்ளார் .
அஜித் நிவர்ட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவெடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment