எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் (Bank Cards) மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (நவ 14) நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பைத் தெரிவித்தார்.
இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பேருந்துகளில் பயணிப்பவர்கள் இலகுவாகப் பணம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். இது பொதுப் போக்குவரத்துத் துறையில் இலத்திரனியல் பணப் பரிமாற்றத்தை (Digital Payment) ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.