எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமக்கு அரசு எரிபொருள் மானியத்தை வழங்காவிட்டால் விலை உயர்வை தடுக்க முடியாது எனவும் மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆட்டோ கட்டணமும் அதிகரிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
#sriLankaNews